Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

பிரகாஸின் ஓராண்டு நினைவேந்தல்


கடந்த வருடம் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மறைந்த  இளம் ஊடகவியலாளரான ஞானப்பிரகாசம் பிரகாஷின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழில் அனுஷ்டிக்கப்பட்டது. 

யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன. 

அதன் போது , மறைந்த ஊடகவியலாளரின் திருவுருவ படத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் த. சித்தார்த்தான் மலர் மாலை அணிவித்தார். ஈகை சுடரினை வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பா. கஜதீபன் ஏற்றினார். அதனை தொடர்ந்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. 

கொடிகாமத்தைச் சேர்ந்த  பிரகாஸ் தனது ஏழாவது வயதில் தசைத்திறன் குறைபாடு (Muscular Dystrophy) நோயினால் பாதிக்கப்படதால்  நடக்க முடியாத நிலை ஏற்பட்டது. 

அதனால் தரம் ஐந்துடன் தனது பாடசாலை கல்வியை இடைநிறுத்திக்கொண்டார். 

அந்நிலையிலும் அவற்றை எல்லாம் தாண்டி  அவர் ஊடக துறையில் தனக்கொன்று ஒரு இடத்தினை தக்க வைத்திருந்தவர்.

சுயாதீன ஊடகவியலாளராக யாழில் இருந்து வெளிவரும் பத்திரிகைகளுக்கு கட்டுரைகள், செய்திகள் எழுதி வந்ததுடன், உள்நாட்டு, வெளிநாட்டு இணையத்தளங்களும் செய்திகளையும் கட்டுரைகளையும் எழுதி வந்தார். அதேவேளை சில இணையத்தளங்களில் செய்தி பதிவேற்றுனராகவும் கடமையாற்றி வந்தார். 

அந்நிலையில் கடந்த 2021 செப்டம்பர் 2ம் திகதி கொரோனாத் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தார்.














No comments