Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

யாழ்.மாவட்ட செயலகத்தில் 22ஆம் திகதி மாபெரும் தொழிற்சந்தைக்கு ஏற்பாடு!


யாழ்ப்பாண மாவட்ட செயலகமும், மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களமும் இணைந்து மாவட்ட செயலகத்தில், எதிர்வரும் 22ஆம் திகதி சனிக்கிழமை தொழிற்சந்தையை நடாத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளது என மாவட்ட செயலர் க. மகேசன் தெரிவித்துள்ளார். 

யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில், 

மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களத்தில் சுமார் 19 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளையோர் தொழில் தேடுபவர்களாக பதிவு செய்துள்ளனர்.

அவர்களுக்கு வேலைவாய்ப்பினை பெற்றுக் கொடுப்பதற்கும் அத்துடன் தொழிற்சந்தைக்குரிய தங்களுடைய கற்கை நெறிகளை பயில ஆர்வம் உள்ளவர்களுக்கு அந்த பயிற்சி நெறியை ஏற்படுத்தும் நோக்கிலும் இந்த தொழில் சந்தை நிகழ்வு நடைபெறுகிறது.

குறிப்பாக தனியார் உற்பத்தி நிறுவனங்கள், சந்தைப்படுத்தல் துறை, ஹோட்டல் துறை, கணக்கியல் துறை, காப்புறுதித்துறை, ஆடை தொழிற்சாலைகள், பாதுகாப்பு சேவை, தாதியர் சேவை மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் போன்ற விடயங்களை உள்ளடக்கி சுமார் 40ற்கும் மேற்பட்ட தொழிற்துறை நிறுவனங்களும், பயிற்சி நெறி நிறுவனங்களும் பங்கேற்றவுள்ளனர்.

தொழிற்பயிற்சி பாடநெறிக்கான கணனித்துறை, தாதிய பயிற்சிநெறி ஏனைய தொழில் பயிற்சி நிறுவனங்கள் கப்பல் துறை தொழில்வாய்ப்பு மற்றும் அதற்கான தொழிற்பயிற்சி மற்றும் ஹோட்டல் முகாமைத்துவத்தில் பயிற்சிநெறிகள் தொடர்பான நிறுவனங்கள் கலந்து கொள்ளவுள்ளன.

தொழில் தேடுபவர்களையும் தொழில் வழங்குநர்களையும் இணைக்கும் மாபெரும் தொழிற்சந்தையாக இது நடாத்தப்படவுள்ளது.

தொழில் தேடுபவர்களையும், தொழில் வழங்குநர்களும் தங்களுடைய தேவைகளை இந்த மாபெரும் தொழிற்சந்தை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.

இந்த மாபெரும் தொழிற்சந்தை தொழில் தேடும் இளைஞர் யுவதிகளுக்கும் தொழில் தகைமை மேலும் மேம்படுத்த ஆர்வம் உடையவர்களுக்கும் பெரிய வாய்ப்பாக அமையும் என்றார்.

No comments