Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

யாழ்.கொட்டடி பகுதியில் விபத்து ; இளைஞன் உயிரிழப்பு


யாழ்ப்பாணம் வைத்தியசாலை  வீதி, கொட்டடி லைடன் சந்திக்கு அண்மையில் இன்றைய தினம் புதன்கிழமை மாலை இடம்பெற்ற  விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

அவருடன் பயணித்த மற்றுமொரு இளைஞன் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

யாழ்ப்பாணம் கொட்டடியைச் சேர்ந்த றொபிக்‌ஷன் (வயது-21) என்ற இளைஞரே உயிரிழந்தார் என்று பொலிஸார் கூறினர்.

யாழ். நகரில்  இருந்து கொட்டடி நோக்கி வேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியின் அருகில் இருந்த மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிள் பயணித்த இருவரில் ஒருவர் சம்பவத்தில் இடத்தில் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

 சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments