Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

யாழில்.இயங்கும் வன்முறை கும்பலான ஆவா குழுவின் தலைவன் கைது!


யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் சிறுவன் மீது வாள் வெட்டு தாக்குதல் நடாத்திய குற்றச்சாட்டில் , யாழில் இயங்கும் ஆவா குழுவின் தலைவன் என பொலிஸாரினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள வினோதன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

யாழ்ப்பாணம் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தவணை ஒன்றுக்காக சென்று திரும்பிய நிலையிலேயே விநோதன் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் , கைது செய்யப்பட்ட வினோதனிடம் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில் அவரிடமிருந்து வாள் ஒன்றினையும் மீட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.  

உரும்பிராய் பகுதியை சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் மீது , தீபாவளி தினமான கடந்த திங்கட்கிழமை இணுவில் பகுதியில் வைத்து , இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு பேர் கொண்ட வன்முறை கும்பல் வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளது. 

தாக்குதலில் படுகாயமடைந்த சிறுவன் யாழ், போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் , ' தன் மீது ஆவா வினோதன் தலைமையிலான குழுவினரே தாக்குதல் நடாத்தினார்கள்' என பொலிஸாரிடம் வாக்கு மூலம் அளித்திருந்தான். 

அதன் அடிப்படையிலையே வினோதன் கைது செய்யப்பட்டு , விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார். 

No comments