Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

"எனக்கு யாரும் வகுப்பெடுக்க வேண்டாம்" ; சி.வி.கே யின் ஊடக சந்திப்பு தொடர்பில் ஆளுநர் காட்டம்!


வட மாகாண ஆளுநர் என்ற வகையில் மக்கள் நலன் சார்ந்த அபிவிருத்தி திட்டங்களுக்காக சட்ட திட்டங்களை உரிய வகையில் நிறைவேற்றுவேன். தமது வரம்பு தெரியாமல் எனக்கு வகுப்பெடுக்கக் கூடாது என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.

ஆளுநர் செயலகத்தால் அனுப்பி வைக்கப்பட்ட ஊடக அறிக்கையிலே இவ்வாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதில் குறிப்பிடப்பட்டதாவது, 

ஆளுநர் தான் நினைத்தபடி நியதிச் சட்டங்களை உருவாக்கி வர்த்தமானி வெளியிடுகிறார் என என் மீது குற்றம் சட்டி,  சிலர் தம்மை மக்கள் மத்தியில் தலைவர்களாகக் காட்ட முயல்கின்றனர்.

வட மாகாண சபை செயற்பாட்டில் இல்லாத காலத்தில் மக்கள் நலன் சார்ந்த பல நியாதிச்ச சட்டங்கள் ஏற்கனவே உருவாக்கப்பட்டு செயல்படுத்தாமல் உள்ளது.

ஆளுநரின் அதிகாரத்தின் கீழ் 154C மாகாண சபையொன்றுக்கு நியதிகளை இயற்றும் அதிகாரம் அவற்றில் உள்ள விடயங்கள் தொடர்பான நிறைவேற்று அதிகாரம், அந்த மாகாண சபை ஸ்தாபிக்கப்பட்ட மாகாண ஆளுநரால் நேரடியாகவோ அல்லது அமைச்சர்கள் சபையின் அமைச்சர்கள் மூலமாகவோ அல்லது கீழ்நிலை அதிகாரிகள் மூலமாகவோ செயல்படுத்தப்படும்.

பிரிவு 154F அதைத்தான் அரசியலமைப்புச் சட்டம் சொல்கிற நிலையில் ஒவ்வொரு சட்டமும் மாகாண நிர்வாகத்தின் மூலம் செயல்படுத்தப்படுகிறது. 

பல சட்டங்கள் பல ஆண்டுகளாக முடிக்கப்படாமல் வைக்கப்பட்டுள்ள நிலையில் சிலருக்கு மறுபரிசீலனை தேவைப்படுகிறதோடு தமது அதிகார வரம்பு தெரியாமல் பேசுகின்றனர்.

 அரசியலமைப்பில் எழுதப்பட்ட மகாண அதிகாரங்கள் பல தமது செயல்பாடுகளை செய்யாத நிலையில் அவை ஒவ்வொன்றாகச் சரிபார்க்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

 நிர்வாக ரீதியாகவும் இடைவெளிகள் உள்ளதோடு அதிபர் ஆசிரியர்களின் இடமாற்றங்கள் யாழ்ப்பாணத்திற்கு சாதகமான கொள்கையைக் கொண்டிருந்தனர்.

கடந்த காலங்களில் மாகாண அரச சேவை சில வட்டத்துக்குள் முடக்கிவிடப்பட்ட நிலையில் சகல மக்களுக்கும் சென்றடையும் வகையில் இலகுபடுத்தப்பட்டுள்ளது.

ஆகவே ஆளுநர் என்ற வகையில் வடக்கு மக்களுக்கான அபிவிருத்திகளை மேற்கொள்ள உரிய சட்ட திட்டங்களை செயல்படுத்துவேன் யாரும் எனக்கு கற்பிக்க வேண்டாம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 வடமாகாண ஆளுநர் தான் நினைத்தவாறு நியதி சட்டங்களை இயற்றி வர்த்தமானி அறிவித்தல்களை விடுத்துள்ளார் என கூறி அதற்கு எதிராக தாம் ஜனாதிபதியிடம் முறையிட தீர்மானித்துள்ளதாக வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் ஊடக சந்திப்பில் தெரிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது. 

No comments