மாவீரர் வாரம் இன்றைய தினம் திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாவீரர் நினைவுத் தூபியில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.
இதன்போது பல்கலைக்கழக மாணவர்களால் மாவீரர் தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
மாவீரர் நாளான எதிர்வரும் 27ஆம் திகதி வரை அஞ்சலி நிகழ்வுகளை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகள் மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
No comments