Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

கால்நடைகளின் உயிரிழப்புக்கான காரணம் வெளியாகின


கடந்த சில நாட்களாக நிலவிய மோசமான வானிலை காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 1,660 பசுக்கள், எருமைகள் மற்றும் ஆடுகள் உயிரிழந்திருந்தன.

இதனையடுத்து இந்த திடீர் மரணங்கள் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு விவசாய, வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.

இதன்படி, பேராதனை கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தினால் கால்நடைகள் மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை இன்று (13) விவசாய அமைச்சரிடம் கையளிக்கப்பட்டிருந்தது.

விசாரணை அறிக்கையின் படி, இந்த விலங்குகள் இறந்ததற்கு காரணம் தொற்றுநோய் அல்ல எனவும் கடுமையான குளிரால் ஏற்பட்ட அதிர்ச்சிதான் காரணம் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள விலங்குகள் அதிக வெப்பமான காலநிலைக்கு பழகி வருவதால், திடீரென ஏற்பட்ட வானிலை மாற்றத்தினால் ஏற்பட்ட கடும் குளிரை அந்த விலங்குகளுக்கு தாக்குப்பிடிப்பது கடினமாக இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

அதனால் ஏற்பட்ட அதிர்ச்சியே இந்த உயிரிழப்புகளை ஏற்படுத்தியதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments