Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

கடத்தப்பட்டு, படுகாயங்களுடன் மீட்கப்பட்ட ஜனசக்தி குழும தலைவர் உயிரிழப்பு!


பொரள்ளை மயானத்தில் காரில் பலத்த காயங்களுடன் காணப்பட்ட ஜனசக்தி குழுமத்தின் தலைவர் தினேஷ் ஷாப்டர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் கடத்தப்பட்டு பலத்த காயங்களுக்கு உள்ளாகி இருந்த நிலையில் பொரளை மயானத்திற்கு அருகில் இருந்து நேற்றைய தினம் வியாழக்கிழமை  இன்று மாலை மீட்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளில், 

 பல கோடி ரூபா கடனுதவி வழங்கம் நபர் ஒருவரை சந்திக்க போவதாக மனைவியிடம் கூறிவிட்டு, குருந்துவத்தை மல்பாறை பிரதேசத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார். 

நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாத நிலையில், அவரது மனைவி  தொலைபேசியில் அழைத்து பார்த்தபோது அவரது தொலைபேசியை தொடர்பு கொள்ளாமல் முடியாமல் இருந்துள்ளது.

தொலைபேசி ஊடாக கிடைத்த சிக்னல்களுக்கு அமைய அவரது தொலைபேசி பொரளை மயானத்திற்கு அருகில் இருப்பதை மனைவி கண்டுபிடித்துள்ளார்.

இதில் சந்தேகமடைந்த அவரின் மனைவி, நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி ஒருவரிடம் கூறி அவரை பொரளை மயானத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.

இதன்போது கடத்தப்பட்ட நபர் வந்த காரின் சாரதி இருக்கையில் கைகள் கட்டப்பட்டிருந்ததையும், கழுத்தில் கம்பியொன்றும் கிடந்ததையும் அவர் அவதானித்து, ​​உடனடியாக செயற்பட்ட குறித்த நிறைவேற்று அதிகாரி, மயானத்தில் இருந்த தொழிலாளியின் உதவியுடன் கடத்தப்பட்டவரின் கைகளையும் கழுத்தில் இருந்த கம்பியையும் அகற்றி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஒருவர் இவரிடம் இருந்து பல கோடி ரூபா கடன் பெற்றுள்ளதாகவும், இது தொடர்பில் ஜனசக்தி குழும தலைவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் 03 முறைப்பாடுகளை செய்துள்ளதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

No comments