Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

யாழ். கோட்டையில் சீனத் தூதுவர் ; பட்டு வேட்டியுடனும் பிரசன்னம்!



யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள சீன தூதரகத்தின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் இன்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாண கோட்டைக்கு சென்று கோட்டையை பார்வையிட்டனர். 

இலங்கைக்கான சீனாவின் பிரதித் தூதர் ஹு வெய், சீனத்துதரக அரசியல் விவகார அதிகாரி லியோ சொங் உள்ளிட்ட மூவர் குழுவினர் யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் புதன்கிழமை விஜயம் மேற்கொண்டுள்ளனர்.  

அந்த குழுவினர் மாலை கோட்டைக்கு விஜயம் மேற்கொண்டு , கோட்டையை பார்வையிட்டனர்.

அதேவேளை குறித்த குழுவில் அடங்கியிருந்த ஒருவர் பட்டு வேட்டி அணிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

No comments