Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

உள்ளூர் வணிகங்களை இணைய மயமாக்கும் செயற்திட்டம் ; முல்லையில் சந்திப்பு


முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள தொழில் முயற்சியாளர்களுக்கும் Business board நிறுவனத்திற்கும் இடையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில்   நடைபெற்றது.

இதன்போது உள்ளூர் வணிகங்களை இணையமாக்குவதன் மூலம் எவ்வாறு வியாபாரத்தை மேம்படுத்த  முடியும், சந்தைப்படுத்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வெளிச் சந்தையை உருவாக்கி எதிர்காலத்தில் வருமானத்தை எவ்வாறு அதிகரிக்க முடியும், போன்ற விடயங்கள் தொடர்பில் Business Board பணிப்பாளர் சுஜன் முயற்சியாளர்களுக்கு விரிவாக தெளிவுபடுத்தினார்.  

அத்துடன் “வடக்கு- கிழக்கு தொழில் முயற்சியாளர்களை இணைப்பதே எமது நோக்கமாகும். தற்போது, கிளிநொச்சி மாவட்ட பதிவுகள் நிறைவு பெற்றுள்ளது. அடுத்ததாக முல்லைத்தீவும் தொடர்ந்து வவுனியா, மன்னார் , யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களிலுள்ள தொழில் முயற்சியாளர்களை இணைக்க திட்டமிட்டுள்ளோம்.

அதனைத்தொடர்ந்து, வெளிநாட்டு  உற்பத்தியாளர்களை பதிவு செய்து கொள்வோம். அதனூடாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உற்பத்தியாளர்களை இணைப்பதே எமது நோக்காகும் “ என BB பணிபாளர் சுஜன் மேலும் தெரிவித்தார். 

அதேவேளை குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட உலக உணவு திட்ட உதவி திட்ட பணிப்பாளர் ஜெயபவானி கணேசமூர்த்தி  தெரிவிக்கையில், 

வறுமையில் இரண்டாவது இடமாகவுள்ள எமது  முல்லைத்தீவு மாவட்டத்தில் BB நிறுவனத்தின்  கைத்தொழில் முயற்சியாளர்களுக்களுக்கான “இணைய பதிவு”  செயற் திட்டத்தின் மூலம் உள்ளூர் உற்பத்திகளை வெளியுலகிற்கு அறிமுகம் செய்து சந்தைப்படுத்துவதன் மூலம் எமது மாவட்டத்தை வறுமை நிலையிலிருந்து மீண்டெழச்செய்யலாம். இந்த இலவச சேவை நோக்கிற்காக BusinessBoard பணிப்பாளருக்கு நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

மேலும், இந்த சந்திப்பில்,  தொழில் முயற்சியாளர்கள், கைத்தொழிலாளர்கள், வியாபார நிறுவனங்களை நடாத்துபவர்கள் கலந்துகொண்டு தமக்கான சந்தைப்படுத்தல் நடவடிக்கைகள் தொடர்பிலும், அவை தொடர்பான சந்தேகங்களையும்  கேட்டறிந்துகொண்டதுடன்,  தாமாக முன்வந்து அவர்களது  வியாபார நிறுவனங்களை Business Board இணையத்தில் பதிவு செய்தமை குறிப்பிடத்தக்கது.  

அத்துடன் , Business Board இணையப்பதிவின் மூலம் சர்வதேச சந்தைகளை கண்டறியும் இத்திட்டம் தமக்கு  ஒரு உந்துசக்தியாக அமையும் என கூறியதோடு BB இன் நேரடி செயற்பாடுகள் குறித்து தமது நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டனர்.

நிகழ்வில் Business Board  பணிப்பாளர், முல்லை கைத்தொழில் பேரவை தலைவர் , மாவட்ட சிறுதொழில் அபிவிருத்தி பிரிவு உத்தியோகத்தர்கள்  , விதாதா அபிவிருத்தி உத்தியோகத்தர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.






No comments