Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

மண்டைதீவில் விரைவில் சர்வதேச விளையாட்டு மைதானம்


யாழ்ப்பாணம் மண்டைதீவிவில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் சர்வதேச விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான ஏற்பாடுகளை விரைவில் ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

வடமாகாண இளைஞர் யுவதிகளுக்கான ஒருங்கிணைந்த அணுகுமுறையை ஏற்படுத்தும் மாகாணமட்ட கலந்துரையாடல் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க தலைமையில் இன்றைய தினம் வியாழக்கிழமை  யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

வடக்கு மாகாண ஆளுநர் அலுவலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற  இக் கலந்துரையாடலில் இளைஞர் யுவதிகளை வலுப்படுத்தி விளையாட்டு மற்றும் பொருளாதாரத்தில் ஈடுபடுத்தி ஒருங்கிணைந்த அணுகுமுறையை ஏற்படுத்துவைத்து சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டது.

இதன்போது, யாழ்ப்பாணம் மண்டைதீவிவில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் சர்வதேச விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான ஏற்பாடுகளை விரைவில் ஆரம்பிப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

 மைதானத்திற்காக ஏற்கனவே 50 ஏக்கர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் எனினும் 100 ஏக்கர் வரை தேவைப்படுவதாகவும் அதனை பெற்றுக் கொள்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. 

மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஜிம்னாஸ்ட்டிக் ஸ்ரேடியம் அமைப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. மேலும் மாவடங்கள் தோறும் விளையாட்டு மையங்களை அமைப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.  

குறித்த கலந்துரையாடலில் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர் ரோஹண திசாநாயக்க வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன், வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துல சேன, யாழ்.மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் , கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் வரதீஸ்வரன் யாழ்.மாவட்ட பிரதம திட்டமிடல் பணிப்பாளர் நிக்களஸ்பிள்ளை மற்றும் வடமாகாண விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரம் சார்ந்த அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

No comments