அனைவரும் வாயை மூடிக்கொண்டு உட்கார வேண்டும் என்பதே அரசாங்கம் பொதுமக்களுக்கு சொல்லும் செய்தி என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி நேற்று நடத்திய போராட்டத்தின் மீது பொலிஸார் மேற்கொண்ட அடக்குமுறைகுறித்து கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் கடந்த வாரம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கூட, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, வாயை மூடி அமருமாறு எதிர்க்கட்சி உறுப்பினருக்கு தெரிவித்ததையும் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.
அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் ஆயிரக்கணக்கானோர் நேற்று நடத்திய போராட்டத்தில் பொலிஸார் பல் முறை கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டிருந்தனர்.
இந்த போரட்டத்தில் காயமடைந்த 28 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments