Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

வீதியில் நெல் உலரவிடப்பட்டமையால் நேற்றும் ஒருவர் உயிரிழப்பு ; இரு வாரத்தில் இரு உயிரிழப்பு!


வீதியில் நெல் உலர விடப்பட்டு இருந்தமையால் , ஏற்பட்ட விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

வீதியில் நெல் உலர விடப்படுவதனால் , கடந்த இரு வார கால பகுதியில் கிளிநொச்சியில் நடந்த விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளனர். 

பரந்தன் - முல்லைத்தீவு வீதியில் கண்டாவளை சந்திக்கு அருகில் நேற்றைய தினம் சனிக்கிழமை பிற்பகல் பாரவூர்தி ஒன்று துவிச்சக்கர வண்டியில் சென்றவரை மோதியதில், துவிச்சக்கர வண்டியில் சென்றவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்தார். 

வீதியின் அரைவாசி பகுதிக்கு நெல் உலர விடப்பட்டு இருந்தமையால் , வீதியின் மறு பக்கத்தில் கனரக வாகனம் பயணித்தமையால் , வீதியின் இடம் போதாமையால் , வீதியில் சென்ற துவிச்சக்கர வண்டியுடன் மோதி விபத்து ஏற்பட்டதாக விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் பரந்தன் - பூநகரி வீதியில் நெல் உலரவிடப்பட்டு இருந்தமையால் ஏற்பட்ட விபத்தில் பூநகரி பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்து இருந்தமை குறிப்பிடத்தக்கது. 

No comments