Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

"சாம் சூசைட் பண்ண போறான்"


தமிழ் கிரியேட்டர்ஸ் தயாரிப்பில் நிவேதிகன், ஹர்ஷானி, ஜஷி, ஸ்டீனோ, காந்தரூபன், இவாஞ்சலின், மல்கின், நெய்ல் ரெக்ஷன், மொரிஸ், சரண்ஜன் ஆகியோர் நடிப்பில் அருளானந்தம் ஜீவதர்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள  “சாம் சூசைட் பண்ண போறான்” குறும்படம் யூடியூப் தளத்தில் வெளியாகியுள்ளது. 

இந்த குறும்படத்திற்கான ஒளிப்பதிவை ரிஷி செல்வமும், படத்தொகுப்பு ஸ்ரீ துஷிகரனும் மேற்கொன்டுள்ளனர்.  பிரணவன் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு, ஒப்பனை அன்ட்ரூ ஜூலியஸ், டைட்டில் டிசைன் ரஜீவன், மக்கள் தொடர்பு துவாரகனுமாக பணியாற்றியுள்ளனர். 

இப்படம் குறித்து படக்குழு தமது சமூக வலைத்தளங்களில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது,

 ”ஒரு முழுமையான ஜனரஞ்சகமான சினிமாவுக்கான ஒத்திகையாக இந்த 20 நிமிட சினிமாவை முயற்சித்துள்ளோம். கருத்து சொல்லுதலோ, ஆழமான உள்ளடக்கமோ இதிலில்லை.

தொழில்நுட்ப ரீதியாக திரைக்கதை, ஒளிப்பதிவு, இசை, படத்தொகுப்பு போன்றவற்றை முன்னிறுத்தி இயன்றவரை எமது சக்திக்கு உட்பட்டு ஜனரஞ்சக சினிமாவாக முயற்சித்துள்ளோம்.

Ceylon Pictures youtube ல் வெளியாகியுள்ள எம் சினிமாவை பார்த்து எந்தவித எல்லைகளும், சமரசமும் பச்சாபாதமும் இன்றி தங்கள் மேலான கருத்துக்களை கூறுங்கள். Making நன்றாக இருந்தால் நாலு பேருக்கு சொல்லுங்கள்” என பதிவிட்டுள்ளனர். 

  “சாம் சூசைட் பண்ண போறான்” டைட்டிலே வித்தியாசமாக இருக்கின்றது. பல முன்னணி கலைஞர்கள் இதில் இணைந்துள்ளதால் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

No comments