யாழ்ப்பாணம் -அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிலாவரை கிணறு அமைந்துள்ள பகுதியில் அரசமரத்துக்கு கீழே புத்தரின் உருவ சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது
இரவோடு இரவாக இனந்தெரியாதவர்களால் புத்தர் வைக்கப்பட்டிருக்கலாமென தெரியவருகிறது.
மரத்திலான கூடு போன்ற அமைப்பொன்றினுள் சிலை வைக்கப்பட்டு வழிபாட்டிற்கு ஏற்றது போல ஊதுபத்தி மற்றும் விளக்குகளும் வைக்கப்பட்டுள்ளன.
நிலாவரை பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினர் உரிமை கொண்டாடும் நிலையில் நிலாவரை பகுதியை சுற்றி இராணுவத்தினர் கடமையில் ஈடுபட்டு வரும் நிலையில் குறித்த சிலை வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
No comments