கிளிநொச்சி மற்றும் மன்னார் பகுதிகளை சேர்ந்த சிறுமிகளை காதலிப்பதாக கூறி கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய இரு சம்பவங்கள் அண்மையில் பதிவாகியுள்ளன.
கிளிநொச்சி பகுதியை சேர்ந்த 14 வயதான சிறுமி ஒருவரை காதலிப்பதாக ஹெரோயின் பாவனைக்கு அடிமையான 16 வயது சிறுவன் கூறி காதலித்து வந்துள்ளார்.
அந்நிலையில் ஒருநாள் சிறுமையை வீட்டை விட்டு வெளியே வருமாறு கூறி கொழும்புக்கு அழைத்து சென்றுள்ளார். சிறுமியும் வீட்டில் இருந்து 5 பவுண் நகையினை திருடி சென்றுள்ளார்.
கொழும்பு அழைத்து சென்ற சிறுமியை கொழும்பில் மேலும் மூவர் இணைந்து கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய பின்னர் சிறுமியை கிளிநொச்சி பகுதிக்கு மீள அழைத்து வந்து கை விட்டு சென்றுள்ளனர்.
அதேவேளை மன்னார் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி கிளிநொச்சி பகுதிக்கு அழைத்து வந்த இளைஞன் அங்கு வைத்து தனது நண்பருடன் இணைந்து கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய பின்னர் சிறுமியை கைவிட்டு சென்றுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், மன்னார் சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றத்தில் இளைஞனை கைது செய்ய முயன்ற வேளை இளைஞன் உயிர்மாய்க்க முயன்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.







No comments