Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

அமைச்சரவையில் விரைவில் மாற்றம்!


ஒரு பில்லியன் டொலர் கடன் பெறுவது தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் பச்சைக்கொடி காட்டியுள்ளதாக Bloomberg இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்திடம் சாதகமான பதில் கிடைத்தவுடன் அமைச்சரவை மாற்றியமைக்கப்படும் என ஜனாதிபதி சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அமைச்சுக்களின் செயற்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதி அறிக்கை கோரியுள்ளதோடு அதில் எரிசக்தி, பொலிஸ் மற்றும் வர்த்தக அமைச்சுகள் ஆகிய மூன்று அமைச்சர்களே வெற்றிகரமாக செயற்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட தற்போதைய அமைச்சரவையை மாற்றுமாறு ஜனாதிபதிக்கு நெருக்கமான நபர்கள் மற்றும் அமைப்புகள் கோரியுள்ளன.

இந்த நிலையில் விளையாட்டு, நெடுஞ்சாலைகள், போக்குவரத்து , வெகுஜன ஊடகத்துறை , துறைமுகம், தொழில் அமைச்சு என்பன அமைச்சரவை மாற்றத்தின் போது மாற்றப்பட உள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது

No comments