யாழ்ப்பாணம் நெல்லியடிப் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கரவெட்டி, கப்பூது பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற தோட்டக் கிணற்றில் வீழ்ந்து வயோதிபர் ஒருவர் நேற்றைய தினம் திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார்.
அதே பகுதியைச் சேர்ந்த வேலுப்பிள்ளை பொன்னையாபிள்ளை (வயது- 65) என்பவரே உயிரிழந்துள்ளார்.
பாதுகாப்பற்ற வயல் கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அப்பகுதியில் நில மட்டத்துடன் பாதுகாப்பற்ற கிணறுகள் காணப்படுவதாகவும் அவற்றை காணி உரிமையாளர்கள் பாதுகாப்பு வேலி அமைத்து பாதுகாப்பானதாக செய்ய வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரியுள்ளனர்.
No comments