பல்லேகெல சிறைச்சாலையில் இருந்து தப்பிச் செல்லும் போது மகாவலி ஆற்றில் விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்த கைதியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பல்லேகல பொலிஸார் மற்றும் கடற்படையினரின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் பின்னர் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு 15 இல் வசிக்கும் 34 வயதுடைய கைதியே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
நேற்று (25) சிறைச்சாலையில் இருந்து தப்பிச் சென்ற கைதியை பொலிஸார் கைது செய்யச் செல்லும் போது, அவர் மகாவலி ஆற்றில் குதித்துள்ளார்.
No comments