யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞனொருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி பரந்தன் பகுதியை சேர்ந்த குமாரசாமி கஜீபன் (வயது 27) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபர் ஓட்டி வந்த ஹயஸ் ரக வாகனம் மிருசுவில் பகுதியில் உள்ள இராணுவ முகாமுக்கு அருகில் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி வீதியோர மரத்துடன் மோதி விபத்துக்கு உள்ளானது.
சம்பவம் தொடர்பில் கொடிகாம பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments