Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் 80 வீத மருந்துகள் காலாவதி; தவறான கணணித்தரவே காரணம்!



- அப்ரா அன்சார்- 

ஸ்ரீ ஜயர்தனபுர வைத்தியசாலையின் நரம்பியல் சத்திர சிகிச்சை பிரிவிற்காக 2017 ஆம் ஆண்டு 4.2 மில்லியன் ரூபா செலவில்  கொள்வனவு செய்யப்பட்ட சத்திர சிகிச்சை  நுகர்வுப் பொருட்களில் 80% பொருட்கள் காலாவதியுள்ளதாக கோப் குழு விசாரனையின் போது தெரிய வந்தது. 

தவறான கணணித் தரவு உள்ளீடே இதற்கான பிரதான காரணமாக அமைந்தமை எமது புலனாய்வின் மூலம் தெரியவந்துள்ளது. 

கடந்த 2017 ஜனவரி 1 இல் உள்ளீடு செய்யப்பட வேண்டிய ரூபா 51,606,804 ஆரம்ப மீதியானது 2016 ஜனவரி 1 இல் ஆரம்ப மீதியாகத் தவறாகப் பதிவாகியதால் தரவைத் திருத்துவதற்குப் பதிலாக தவறாகப் பதிவு செய்யப்பட்ட பணத்திற்கு சமனான தொகைக்கு தேவையின்றி மருந்து மற்றும் சத்திர சிகிச்சைப் பொருட்கள் வழங்கப்பட்டதன் காரணமாகவே இந்த இழப்பு ஏற்பட்டுள்ளது.

 இவற்றில் பொதியிலடைத்தற் பொருட்கள், நுகர் பொருட்கள், கதிரியக்கப் பொருட்கள், ஆய்வு கூடப் பொருட்கள், எழுது கருவி  வகைப் பொருட்கள், பொதுக் களஞ்சியப் பொருட்கள் ஆகியவை அடங்கும். 

இதன் போது தவறாக வரவு வைக்கப்பட்ட ரூபா 51,606,804 தவறை நிவர்த்தி செய்வதற்கு அதற்குச் சமனான பெறுமதி ஒவ்வொரு கையிருப்புக் கணக்கிலிருந்தும் (Stocks balance) குறிப்பிட்ட கொள்வனவுக் கணக்குகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

அதாவது மேலதிக  இருப்புக் கணக்கை மூடி மறைப்பதற்காக கணக்கீட்டில் அவை கொள்வனவுக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. வைத்தியசாலைக்கு எவ்வாறு மருந்துப்பொருட்கள் கொள்வனவு செய்யப்படுகிறது குறித்து ஜயவர்தனபுர மருத்துவமனை தொழிற்சங்க ஒருங்கிணைப்பாளரான சந்தன ஜயலத்திடம் வினவினோம்,

 


வைத்தியசாலைக்கு பல முறைகளில் மருந்துகள் கொள்வனவு செய்யப்படுகிறது. குறிப்பாக இந்த பிரச்சினையின் போது ஒரு பிரதான முறையின் கீழே மருந்துகள் கொள்வனவு செய்யப்பட்டது. அதாவது தனியார் மருத்துவ நிறுவனங்கள் வைத்திய சாலையினுள் இருக்கும் சில ஊழியர்கள் ,அதிகாரிகளின் மூலமாக மருந்து வியாபாரத்தில் ஒரு பங்காளர்களாக மருந்துகளை பகிர்ந்தளிக்கின்றனர். 

இதன் மூலமாகவே இருக்கும் ஊழியர்கள் ,அதிகாரிகள் குறித்த செயற்திட்டத்தில் மும்முரமாக செயற்படுகின்றனர். ஒரு நாள் இந்த வைத்தியசாலைக்கு வந்து பார்த்தால் இங்கு எத்தனை மருந்து முகவர்கள் அங்கும் இங்கும் திரிகிறார்கள் என்பது புரியும், என அவர் கூறினார். “இன்று இந்த வைத்தியசாலை ஒரு மருத்துவ விற்பனை பன்னையாக மாறியிருக்கிறது,” என்றார். 

குறிப்பிட்ட மருந்துகள் எப்போது கொள்வனவு செய்யப்பட்டது என அவரிடம் வினவினோம்,

 “2017ஆம் ஆண்டு ஆகும் பொழுது குறிப்பிட்ட சோதனை நடக்கும் போது காலவதியான நிலையிலேயே இந்த மருந்துகள் காணப்பட்டது. நான் தகவலறிந்த வகையில்,மருந்துப் பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டது 2016 காலப்பகுதியில் அப்போது அவை கலாவதிடைந்திருக்கவில்லை. 

அதாவது தேவைக்கு அதிகமான மருந்துகளின் களஞ்சியப்படுத்தலே இந்த காலவதிக்கு ஒரு பிரதான காரணம் என்றும் கூறலாம்,” என்றார்.

 ஸ்ரீ ஜயவர்தன புர வைத்தியசாலை 2017, 2019 ஆண்டுகளில் பெருமளவான மோசடிகள் இடம்பெற்றிருப்பதாக கோப் குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.. 

இடம் சம்பந்தமான பிரச்சினை, மருந்து கொள்வனவு சம்பந்தமான பிரச்சினை இன்னும் பல வகையான பிரச்சினைகள் அங்கு நிலவுகின்றதாக ஜயலத் தெரிவித்தார். 

அதில் நரம்பியல் சத்திரசிகிச்சைக்காக கொள்வனவு செய்யப்பட்ட மருந்துகள் காலாவதியானது குறித்து மேலும் வினவினோம்,

 “இந்த மோசடி பெரியளவிலான ஒரு மோசடியாக உள்ளது,” என அவர் தெரிவித்தார்.

 “இதற்கு பிரதான காரணம் வைத்தியசாலை வட்டாரத்தில் இருக்கக்கூடிய பலரும் தத்தமது நலன்களையும் இலாப நோக்கமாகவும் செயற்பட்டது தான்,” என அவர் கூறினார். 

“உதாரணத்திற்கு குறித்த ஒரு வகை மருந்து மாதத்திற்கு ஒன்று தான் தேவைப்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த குறிப்பிட்ட மருந்தை தேவைக்கு அதிகமாக கொள்வனவு செய்து, ஒன்றுக்கு 10 கூடுதலாக கொள்வனவு செய்து தேவைக்கு அதிகமான களஞ்சியப்படுத்தலே இவ்வரான 80% காலவாதிக்கான காரணம்,” என அவர் குறிப்பிட்டார். 

மேலும் குறிப்பிடுகையில் ,

இவ்வாறு மருந்துகளை முறையற்ற முகாமைத்துவம் இல்லாமல் கொள்வனவு செய்வதற்கான ஒட்டு மொத்த பொறுப்பும் வைத்தியசாலையின் நிதிக்குழுவையையே சாரும் அவர்களே பொறுப்புக் கூற வேண்டும் எனவும்  குறிப்பிட்டார். 

இது தொடர்பில் ஶ்ரீஜயவர்தனபுர வைத்தியசாலை தலைமை நிர்வாக அதிகாரி வைத்தியர்,ரத்னசிரி ஹேவாகேயிடம் நாம் வினவிய போது, 


“குறிப்பிட்ட பிரச்சினை நான் பதவி ஏற்க முன்னர் நடந்த சம்பவம் ஆகும். குறிப்பாக நான் பதவி ஏற்றதன்  பின் 2019 ஆண்டளவில் குறிப்பிட்ட பிரச்சினை மீண்டும் பேசப்பட்டது. அவ்வேளை கூட எனக்கு இது பற்றிய சரியான தகவல் தெரியாது. அதன் பின்னரே நான் இது சம்பந்தமாக ஆராயத்தொடங்கினேன். 

குறிப்பிட்ட 4.2 மில்லியன் கொள்வனவில் 80% சதவீதமான பொருட்கள் காலாவதி ஆகியமை உண்மை எனவும் அவர் குறிப்பிட்டார். 

மேலும் இது சம்பந்தமான விசாரணை இன்னமும் முடிவுக்கு வரவில்லை எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். “இந்த பிரச்சினைக்கு முழுவதுமாக வைத்தியசாலை நிதித்துறையையே காரணம்,” என அவர் தெரிவித்தார்.

 வைத்தியசாலையின் நிதிக்குழுவிடம் இந்த விடயம் தொடர்பாக கேட்டறிய தொடர்பு கொண்டோம். எனினும் அவர்களிடம் இருந்து எந்த வித பதிலும் எட்டவில்லை. 

நன்றி - அப்ரா அன்சார் (களுத்துறை)

No comments