கொழும்பு கோட்டையில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த யாழ்தேவி கடுகதி ரயில் ஒருகொடவத்த ரயில் பாலத்திற்கு அருகில் தடம் புரண்டுள்ளது.
இரண்டு ரயில் பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக பிரதான வீதியில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
அதன்படி கொழும்பு நோக்கி வரும் சில ரயில்களில் சில தாமதங்கள் ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, தடம் புரண்ட யாழ்தேவி ரயிலை மீண்டும் தண்டவாளத்தில் இணைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
No comments