பாகிஸ்தானில் நேற்றைய தினம் திங்கட்கிழமை நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் 9 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டதுடன் 13 பேர் காயமடைந்துள்ளனர்.
போலானின் காம்ப்ரி பாலம் பகுதிக்கு அருகில் குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், காயமடைந்தவர்கள் தலைமையக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெடிகுண்டு செயலிழப்பு குழு சம்பவம் நடந்த இடத்திற்கு வந்ததாகவும், மேலும் அப்பகுதியில் நடைபெற்ற குண்டுவெடிப்பு தொடர்பாக தேடுதல் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தற்கொலைப்படை தாக்குதல் என்றும், எனினும், விசாரணைக்குப் பிறகே முழுமையாக கண்டறிய முடியும் என்று கச்சியின் மூத்த காவல் கண்காணிப்பாளர் (எஸ்எஸ்பி) மெஹ்மூத் நோட்ஜாய் தெரிவித்துள்ளார்.
No comments