மஹிந்த ராஜபக்சவை பிரதமராக்க வேண்டுமென்றால் அதனை எம்மால் இலகுவில் செய்துவிட முடியும்.
ஆனால் அவ்வாறான எந்தவொரு முயற்சியும் இடம்பெறவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
மொட்டு கட்சி தலைமையகத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய பிரதமர் தினேஷ் குணவர்தன எம்முடன் ஒத்துழைப்புடன் செயற்படுகின்றார். அவருடன் எமக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை என அவர் கூறியுள்ளார்.
ஜனாதிபதி, பிரதமர் பதவி ஆசையில் திரியும் ஒரு சிலரே இப்படியான வதந்திகளை பரப்பிவருகின்றனர்.
மக்கள் ஆதரவு மூலமே மஹிந்தவை பிரதமர் ஆக்குவோம் எனவும் அவர் தெரிவிததுள்ளார்.
No comments