Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

தேர்தல் நடாத்தப்பட்டு மக்களின் ஜனநாயக உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்!


- மயூரப்பிரியன் - 

உள்ளூராட்சி தேர்தலை நடத்தாது அரசாங்கம் இழுத்தடிப்பு செய்வதற்கு பலரும் தமது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அரசியல்வாதிகள் மாத்திரமின்றி பொது மக்கள் என அனைத்து தரப்பினரும் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றே கோருகின்றனர்

இலங்கையில் 24 மாநகர சபைகள் , 41 நகர சபைகள் மற்றும் 276 பிரதேச சபைகளாக 341 உள்ளூராட்சி சபைகள் காணப்படுகின்றன. அவற்றில் 340 சபைகளுக்கான தேர்தல்கள் கடந்த 2018ஆம் ஆண்டுபெப்ரவரி 10ஆம் திகதி நடைபெற்றது.  

 எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் அடுத்த வருடமே நடைபெற்றது. அங்கு தேர்தலில் போட்டியிடுவதற்கு சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுவொன்று நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக, உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டமை காரணமாக, எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் தனியாக 2019 ஒக்டோபர் மாதம் நடத்தப்பட்டது.

எனவே 2018ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்ற உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலம் 4 வருடங்களாகும். அந்த வகையில், எல்பிட்டிய பிரதேச சபை தவிர்ந்த ஏனைய அனைத்து சபைகளின் பதவிக் காலமும் 2022 பெப்ரவரி மாதத்துடன் நிறைவுக்கு வந்தன. ஆயினும், உள்ளூராட்சி அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில், அந்த சபைகளின் பதவிக் காலம் - ஒரு வருட காலத்திற்கு  நீடிக்கப்பட்டது.


ஒருவருட காலம் நீடிக்கப்பட்ட நிலையில் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19ஆம் திகதியுடன் உள்ளூராட்சி சபைகளில் காலம் நிறைவுக்கு வந்தது. 

அதற்கு முன்னராக மார்ச் மாதம் 09 ஆம் திகதி தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு ஜனவரி மாதம் வேட்பு மனுக்கள் கோரப்பட்டு , வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.   


அந்நிலையில் தேர்தலை ஏப்ரல் மாதத்திற்கு ஒத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டது. தற்போதைய நிலையில் ஏப்ரல் மாதத்திலும் தேர்தல்கள் நடாத்தப்படுவதற்கான ஏது நிலைகள் காணப்படவில்லை. 

உள்ளூராட்சி தேர்தலை பொருளாதார நெருக்கடியை காரணம் காட்டி அரசாங்கம் நடாத்தாமல் கால இழுத்தடிப்பு செய்வதாக பல தரப்பினரும் குற்றம் சாட்டி வருகின்றனர். 

தாம் ஒரு பலமான அரசாங்கமாக இல்லாத காரணத்தால் உள்ளூராட்சி தேர்தலை கூட நடாத்த அரசாங்கம் பின்னடிப்பதாகவே பலரும் கருதுகின்றனர். 

உள்ளூராட்சி தேர்தலை பொறுத்தவரை வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு மிக முக்கியமானது என தெரிவிக்கப்படுகிறது. 

மாகாண சபைகளும் இல்லாத நிலையில் தற்போது உள்ளூராட்சி சபைகளும் இல்லாதமையால் மத்திய அரசாங்கத்தின் கீழ் அனைத்து விடயங்களும் சென்றுள்ளன. 

வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் உள்ளூராட்சி சபைகள் இல்லாத நிலையில் மத்திய அரசாங்கம் நேரடியாக அரச உத்தியோகஸ்தர்கள் ஊடாக தாம் நினைப்பதனை செய்து முடிக்க கூடிய நிலைமைகள் உள்ளன.  

உள்ளூராட்சி சபைகளான மாநகர சபை தற்போது ஆணையாளரின் கீழும் , பிரதேச மற்றும் நகர சபைகள் அதன் செயலாளர்கள் கீழும் உள்ளன. 

சபை ஆட்சி காலங்கள் நடைபெற்ற போது, ஆணையாளரோ , செயலாளரோ தாம் நினைத்த வாறு செயற்பட முடியாது. சபையின் அனுமதி பெறப்பட்டு மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் ஒப்புதலுடனையே எதனையும் செயற்படுத்த முடியும். தற்போது அந்த நிலைமை இல்லை. 

யாழ்ப்பாணம் நாவலர் மண்டபத்தினை புத்த சாசன அமைச்சின் கீழ் உள்ள கலாச்சார திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறு வடமாகாண ஆளூநர் , யாழ்.மாநகர ஆணையாளருக்கு அறிவித்துள்ளார். 

யாழ்.மாநகர சபை ஆட்சி காலம் நடைபெற்ற போதும் நாவலர் மண்டபத்தினை கையளிக்குமாறு கோரிய போது , சபை அதற்கு உடன்படவில்லை. சபையின் ஆட்சி காலம் முடிவடைந்து ஓரிரு நாட்களில், நாவலர் மண்டபத்தினை கலாச்சார திணைக்களத்திடம் கையளிக்குமாறு ஆளூநர் ஆணையாளருக்கு கடிதம் மூலம் அறிவித்தார். 

அதற்கு முன்னாள் உறுப்பினர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். , முன்னாள் உறுப்பினர் வ. பார்த்தீபன் , மாநகர சபை முன்னாள் ,முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் ஊடாக மேல் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்த நிலையில் , நாவலர் மண்டபத்தினை கலாச்சார அமைச்சிடம் மாநகர சபை  ஒப்படைக்க இடைக்கால தடை விதித்துள்ளது. 

இவ்வாறு மத்திய அரசாங்கம் அரச உத்தியோகஸ்தர்கள் ஊடாக நேரடியாக தமது நிகழ்ச்சி நிரல்களை செய்ய கூடிய நிலைமைகள் காணப்படுகிறன 

அது மாத்திரமன்றி , சபைகளின் ஆட்சி காலம் முடிவடைந்துள்ள நிலையில் கிராமங்களில் மின் விளக்குகள் பழுதடைந்து இருந்தாலோ , மக்கள் தமது சேவைகளை பெற சபைகளுக்கு செல்லும் போதே அவர்களை புறம் தள்ளும் நிலைமைகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. 

சபை ஆட்சி காலத்தில் வட்டார உறுப்பினர் ஊடாக தமது குறைகளை தீர்த்து கொள்ள கூடிய நிலைமைகள் காணப்பட்ட நிலையில் தற்போது அந்நிலைமைகள் இல்லாதமையால் சிரமங்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலைமை காணப்படுகின்றன. 

எனவே உடனடியாக தேர்தல் நடத்தப்பட்டு மக்களின் ஜனநாயக உரிமையை காக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரி வருகின்றனர். 

No comments