பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள தோட்ட காணி ஒன்றில் இருந்து ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்டவர்கள் அப்பகுதியை சேர்ந்த கணபதிப்பிள்ளை முருகேசம்பிள்ளை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த நபர் நேற்றைய தினம் சனிக்கிழமை வீட்டில் இருந்து வெளியே சென்ற நிலையில் காணாமல் போயிருந்தார். அவரை வீட்டார் தேடி வந்த நிலையில் அப்பகுதியில் உள்ள தோட்ட காணி ஒன்றினுள் சடலமாக காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பளை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டு உடற்கூற்று பரிசோதனைக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்ததுடன் விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.
No comments