யாழ்ப்பாணம் பிரதேச செயலக நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் மூன்றாவது தடவையாக நடாத்தப்பட்ட யாழ் பாடி சதுரங்க சுற்றுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்றது.
சதுரங்க விளையாட்டில் ஆர்வமுடைய யாழ். மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கு களம் அமைத்துக் கொடுக்கும் நோக்கில் நடாத்தப்படுகின்ற குறித்த சுற்றுப்போட்டி இரண்டு தினங்கள் யாழ்ப்பாணம் வைத்தீஸ்வராக் கல்லூரி மற்றும் யாழ். வண்ணை நாவலர் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் நடைபெற்றது.
ஆண், பெண் இருபாலருக்கும் 6,8,10,12,14,16,16 வயதுப் பிரிவுகளிற்கு என்ற அடிப்படையில் சுற்றுப்போட்டி இடம்பெற்றது. அந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வெற்றிக் கிண்ணம் மற்றும் பதக்கம் என்பனவும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுந்தரன், யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் சா.சுதர்சன், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.




.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)


No comments