நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய வாகனம் விபத்துக்குள்ளானதில் காயமடைந்துள்ளார்.
கேகாலை – அவிசாவளை பிரதான வீதியின் ருவன்வெல்ல, கரவனெல்ல பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பயணித்த கார் கரவனெல்ல வீதிக்கு அருகில் இருந்த சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் காயங்களுக்கு உள்ளாகிய ரஞ்சித் சியம்பலாபிட்டிய கரவனெல்ல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
No comments