ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதியம் (UNFPA) அமைப்பு 2023ஆம் ஆண்டு உலக மக்கள் தொகையின் ஆய்வு தகவலை வெளியிட்டுள்ளது.
அதன்படி, நடப்பு ஆண்டில் சீனாவின் மக்கள் தொகையை இந்தியா தாண்டி உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடு என முதலிடத்தை பிடித்துள்ளது.
இந்தாண்டின் மத்தியில் இந்தியாவின் மக்கள் தொகை சீனாவை விட 30 லட்சம் கூடுதலாக இருக்கும்.
எனவே, தற்போதைய சூழலில் உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு என்ற பட்டியலில் முதலிடத்தை இந்தியா பிடித்ததாக ஐநா கணித்து கூறியுள்ளது.