நயினாதீவு பிரதேசத்தில் பழுதடைந்திருந்த மின்பிறப்பாக்கிக்கு பதிலாக சுமார் 300 மெகாவாட்ஸ் உற்பத்தி திறனுள்ள மின்பிறப்பாக்கி ஒன்று புதிதாக பொருத்தப்பட்டுள்ளது.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் இலங்கை மின்சார சபையினால் இந்த மின்பிறப்பாக்கி பொருத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம், நயினாதீவிற்கு 24 மணித்தியால மின்சார விநியோகம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், RO திட்டத்தினை சீராக செயற்படுத்தி நயினாதீவு, அனலைதீவு மற்றும் எழுவைதீவு ஆகியவற்றுக்கான குடிநீர் விநியோகத்தினை தொடர்ச்சியாக வழங்குவதற்கான வாய்ப்பும் உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments