Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

DJ பார்ட்டியில் துப்பாக்கிச் சூடு - ஒருவர் உயிரிழப்பு


காலி, தடெல்ல பிரதேசத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 36 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் இருவர் காயமடைந்துள்ளனர். 

தடல்ல பகுதியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் பின்னர் இரவு வேளையில் இடம்பெற்ற DJ  இசையை பார்த்துக் கொண்டிருந்தவர்களை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

குறித்த அப்பகுதிக்கு வந்த இரு நபர்களே துப்பாக்கி சூடு நடாத்தியதாகவும், சட்டவிரோத மதுபான வியாபாரம் தொடர்பாக உயிரிழந்தவருக்கும் சந்தேகநபர்களுக்கும் இடையில் நீண்டகாலமாக நிலவி வந்த பகைமையினால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்களில் ஒருவர் உயிரிழந்தவரின் உறவினர் என்பதுடன் துப்பாக்கிச் சூட்டுக்கு ​கைத்துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments