Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE
Monday, May 19

Pages

Breaking News

மிருசுவிலில் குடும்பஸ்தர் கனவு கண்டு நிலத்தை தோண்டிய போது 12 விக்கிரகங்கள் மீட்பு!


யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் வசிக்கும் குடும்பஸ்தர் ஒருவரின் கனவில் வீட்டு வளாகத்தினுள் விக்கிரகங்கள் உள்ளதாக கண்டதை அடுத்து , அப்பகுதியை அகழ்ந்த போது 12 விக்கிரகங்கள் காணப்பட்டுள்ளன. 

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 

மிருசுவில் பகுதியில் வசிக்கும் முத்தையா பாஸ்கரன் என்பவரின் கனவில் , அவரது வீட்டு வளாகத்தினுள் தெய்வ விக்கிரகங்கள் புதைந்துள்ளதாக காட்சிகள் தோன்றியுள்ளன. 

அதனை அடுத்து நித்திரையால் எழுந்தவர் கனவில் கண்ட பகுதியை அகழ்ந்த போது , சிவன் விக்கிரகம் ஒன்று, சிவலிங்கம் ஒன்று, வராகி அம்மன் விக்கிரகம் ஒன்று, ஆறுதலை முருகன் ஒன்று, சிவனும் பார்வதியும் இடப வாகனத்தில் அமர்ந்திருக்கும் விக்கிரகம் ஒன்று, ஒற்றைத்தலை நாகம் ஐந்து, ஐந்து தலை நாகம்  இரண்டு ஆகிய 12 விக்கிரகங்களே மீட்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட விக்கிரகங்களை தனது காணிக்குள்ளையே சிறிய கொட்டகை ஒன்றினை அமைத்து , அதனுள் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடாத்தி வருகின்றார். 

இச்சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றதை அடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்