வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திர சேகரப்பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழாவின் திருமஞ்ச திருவிழா இன்றைய தினம் திங்கட்கிழமை மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெற்றது.
ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து வசந்த மண்டப பூஜை இடம்பெற்று விநயாக பெருமான் உள் வீதி எழுந்தருளினார்.
அதனை தொடர்ந்து வர்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட திருமஞ்சத்தில் விநாயக பெருமான் வெளிவீதி வலம் வந்து அடியவர்களுக்கு அருட்காட்சி அளித்தார்.
திருமஞ்ச உற்சவத்தில் ஈழத்தின் புகழ் பூத்த நாதஸ்வர தவில் கலைஞர்களின் விசேட கச்சேரியும் இடம்பெற்றது.
No comments