வவுனியா, பம்பைமடு பகுதியில் வீதியில் சென்ற கர்ப்பிணிப் பெண் மற்றும் அவரது தாய் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டு, அவர்கள் அணிந்திருந்த 6 அரைப் பவுன் நகைகள் மற்றும் ஒன்றரை இலட்சம் ரூபாய் பணம் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த பூவரசன்குளம் பகுதியைச் சேர்ந்த 8 மாத கர்ப்பிணிப் பெண்ணும், தாயும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மோப்ப நாயின் உதவியுடன் பூவரசன்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments