Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

நெல்லியடியில் பரீட்சை எழுதி விட்டு திரும்பிய மாணவிகளுடன் சேட்டை ; நியாயம் கேட்ட மாணவன் மீது தாக்குதல் - ஒருவர் கைது


சாதாரண தர பரீட்சை எழுதி விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவிகளுடன் சேட்டை விட்ட இளைஞர்களிடம் இருந்து மாணவிகளை  காப்பாற்ற முற்பட்ட  மாணவன் மீது இளைஞர்கள் தலைக்கவசத்தால் தாக்கியுள்ளனர். 

நெல்லியடி பகுதியில் இன்றைய தினம் புதன்கிழமை மதியம் இடம்பெற்ற இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, 

பாடசாலை பரீட்சை மண்டபத்தில் பரீட்சை எழுதி விட்டு , வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவிகளுடன் , பாடசாலைக்கு அருகில் மோட்டார் சைக்கிள் நின்ற இரு இளைஞர்கள் சேட்டை விட்டதுடன் , விரும்பத்தகாத வகையில் நடந்து கொண்டுள்ளனர். 

அவ்வேளை பரீட்சை எழுதி விட்டு வந்த சக மாணவன் இளைஞர்களிடம் இருந்து மாணவிகளை பாதுகாக்கும் முகமாக செய்யப்பட்ட போது , இருவரும் மாணவனை தலைக்கவசத்தால் மூர்க்க தனமாக தாக்கி விட்டு அவ்விடத்தை இருந்து தப்பி சென்றுள்ளனர். 

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவ மாணவிகளால் நெல்லியடி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து , விரைந்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் மோட்டார் சைக்கிள் உரிமையாளரை கைது செய்ததுடன் , அவரது மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்துள்ளனர். 

அவருடன் சென்ற மற்றைய நபர் தொடர்பிலான தகவல்கள் கிடைக்க்கப்பெற்றுள்ள நிலையில் அவரை கைது செய்வதற்காக நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

பாடசாலைகள் மற்றும் தனியார் கல்வி நிலையங்களுக்கு அருகில் கூடும் இளைஞர்கள் மாணவிகளுடன் பல்வேறு விதமான சேட்டைகளை புரிவதாகவும் , மாணவர்கள் மத்தியில் போதைப் பொருட்களை விற்பனை செய்வதாகவும் பல்வேறு முறைப்பாடுகள் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்றுள்ளன. 

இந்நிலையில் யாழ். மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இவ்விடயம் தொடர்பில் ஆராயப்பட்டதனை தொடர்ந்து , சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் கல்வி நிலையங்களை சூழவுள்ள பகுதிகளில் பொலிஸாரின் கண்காணிப்பு இருக்கும் எனவும் , பொலிஸார் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments