Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

தீர்க்கமான முடிவொன்றை எடுத்துக்கொண்டு பேச்சுக்கு வாருங்கள்


தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வினை காண்பது குறித்து தீர்க்கமான முடிவொன்றை எடுத்துக்கொண்டு பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதியிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

இனப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துடன் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தையின் அடுத்த கட்டம் சம்பந்தமாக கருத்து வெளியிடும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

நில ஆக்கிரமிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், படுகொலை, அரசியல் கைதிகள் விவகாரம் உள்ளிட்ட விவகாரங்களும் இறுதியாக நடைபெற்ற அதிகாரப்பகிர்வு குறித்த பேச்சுவார்த்தையின் போதும் கூட எவ்விதமான தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.

தீர்வு குறித்து நியாயமான அடிப்படையில் இதய சுத்தியுடன் செயற்படுவதாக இருந்தால் ஜனாதிபதி முதலில் தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு குறித்து முடிவொன்றை எடுத்த பின்னர் தம்மை பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என்றும் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

முடிவுகள் எடுக்கப்படாது தொடர்ச்சியாக பேச்சுக்களை முன்னெடுப்பதானது காலத்தினை வீணடிக்கும் செயற்பாடாகவே அமையும் என்றும் அவ்விதமான நிலைமைகள் தொடர்ந்தால் உரிய தீர்மானங்களை எடுக்க வேண்டுய நிலை ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளார். 

No comments