தனது வீட்டின் முன்பாக வீதியோரமாக இருந்த புற்களை வெட்டிக்கொண்டு இருந்தவர் வாகனம் மோதி உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியை சேர்ந்த சீனியர் சந்திரகாந்தன் (வயது 56) என்பவரே உயிரிழந்துள்ளார்.
அச்சுவேலி - வல்லை பிரதான வீதியில் உள்ள தனது வீட்டின் முன்பாக நேற்றைய தினம் சனிக்கிழமை புற்களை வெட்டிக்கொண்டு இருந்த வேளை , வீதியில் வேகமாக வந்த கப் ரக வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து அவர் மீது மோதி விபத்துக்கு உள்ளானது.
குறித்த விபத்தில் வீட்டின் முன்பாக புற்களை வெட்டிக்கொண்டு இருந்தவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த அச்சுவேலி பொலிஸார் கப் வாகன சாரதியை கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments