Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

``நான் சாகலை.." - சடலங்களுக்கு மத்தியில் இருந்து உயிருடன் எழுந்த நபர்!


சடலங்களுக்கு மத்தியில் மூன்று நாட்களாக மயக்க நிலையில் இருந்தவர் உயிரோடு மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இந்தியாவில் மூன்று புகையிரதங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் சுமார் 288 பேர் உயிரிழந்துள்ள நிலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

உயிரிழந்தவர்களில் 100க்கும் மேற்பட்டவர்கள் சடலங்கள் அடையாளம் காணப்படாத நிலையில் , அவற்றை புகைப்படங்களை எடுத்து விட்டு தகனம் செய்வதா ? தொடர்ந்தும் சடலங்களை பாதுகாப்பதா என அதிகாரிகள் ஆராய்ந்து வரும் நிலையில் , சடலங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களை நேரில் சென்று பார்வையிட்டனர். 

அதன் போது , கடந்த மூன்று நாட்களாக சடலங்களோடு மயக்க நிலையில் இருந்த ராபின் (வயது 35) எனும் நபர் " நான் இன்னும் சாகவில்லை. தண்ணீர் கொடுங்கள்" என அங்கு நின்ற அதிகாரி ஒருவரின் காலை பிடித்து கேட்டுள்ளார். 

அதன் போதே சடலங்களுக்கு மத்தியில் ஒருவர் உயிருடன் இருப்பதனை அதிகாரிகள் கண்ணுற்று , விரைந்து செயற்பட்டு அவரை அங்கிருந்து மீட்டு , வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். 

புகையிரத விபத்தில் சிக்கி சுயநினைவை இழந்து மயக்கமுற்ற நபரை இறந்து விட்டார் என கருதி சடலங்களோடு அவரையும் கொண்டு வந்து அங்கு வைத்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். 


No comments