யாழ்ப்பாணம் நாவாந்துறை பிரீமியர் லீக் தொடரில் ஒஸ்மானியா யுனைட்டட் அணி வெற்றி பெற்றது.
நாவாந்துறை பிரீமியர் லீக் தொடரின் இறுதி போட்டி இன்றைய தினம் சனிக்கிழமை மாலை நாவாந்துறையில் நடைபெற்றது.
இறுதி போட்டியில் ப்ளூ ஸ்கை கிங்ஸ் அணியும் , ஒஸ்மானியா யுனைட்டட் அணியும் மோதின. நானா சுழற்சியில் வெற்றியீட்டிய ப்ளூ ஸ்கை கிங்ஸ் துடுப்பாட்டத்தை தெரிவு செய்து, நிர்ணயிக்கப்பட்ட 08 பந்து பரிமாற்றத்தில் , 05 இலக்குகளை இழந்து 42 ஓட்டங்களை பெற்றுக்கொண்டன.
அதனை தொடர்ந்து 43 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய ஒஸ்மானியா யுனைட்டட் அணி 05.2 பந்து பரிமாற்றத்தில் 02 இலக்குகளை மாத்திரம் இழந்து 48 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.
No comments