Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

இன்றைய ராசி பலன் - 10.06.2023


மேஷம்

இன்று நண்பர்கள் மூலம் சுப செய்திகள் வந்து சேரும். புதிய பொருட்கள் சேர்க்கை மகிழ்ச்சியினை தரும். பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். எதிர்பார்த்த காரியம் எளிதில் நிறைவேறி மகிழ்ச்சியை அளிக்கும். சேமிப்பு உயரும்.

ரிஷபம்

இன்று குடும்பத்தில் பொருளாதாரம் மிகச் சிறப்பாக இருக்கும். உறவினர்கள் மூலம் உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் நிறைவேறும். கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். சுபகாரியம் கைகூடும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும்.

மிதுனம்

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். உறவினர்களுடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளுக்கு நண்பர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும்.

கடகம்

இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. வெளியூர் பயணங்களை தவிர்ப்பது உத்தமம்.

சிம்மம்

இன்று நீங்கள் தொட்ட காரியம் அனைத்தும் வெற்றியில் முடியும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமான புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே இருந்த மனஸ்தாபங்கள் விலகி ஒற்றுமையும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.

கன்னி

இன்று குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்கும் முயற்சியில் வெற்றி அடைவீர்கள். நண்பர்களின் உதவியால் எடுத்த காரியம் எளிதில் முடியும். கொடுத்த கடன்கள் வசூலாகும்.

துலாம்

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சிறு தடைக்கு பின்பு அனுகூலம் உண்டாகும். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வேலையாட்களை அனுசரித்து சென்றால் வியாபாரத்தில் முன்னேற்றத்தை காணலாம். எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு உறவினர்களால் வீண் விரயங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சினைகள் உண்டாகும். பெரிய மனிதர்களின் நட்பு நல்ல மாற்றத்தை தரும். தொழிலில் வெளியூர் தொடர்புகள் மூலம் அனுகூலப் பலன்கள் இருக்கும். எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது.

தனுசு

இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடித்து வெற்றி அடைவீர்கள். குடும்பத்தில் உற்றார் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு திறமைகேற்ப புதிய வாய்ப்புகள் கிட்டும். தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமை குறைந்து லாபம் அதிகரிக்கும்.

மகரம்

இன்று நீங்கள் மனஉறுதியோடு பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி வரும். குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். நிதானத்தை கடைப்பிடிப்பதன் மூலம் விரயங்களை தவிர்க்கலாம். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

கும்பம்

இன்று குடும்பத்தில் பெரியவர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் மறைந்து ஒற்றுமை கூடும். எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். கூட்டாளிகளின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களின் சந்திப்பு மன மகிழ்ச்சியை தரும்.

மீனம்

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். உடல்நிலையில் சற்று மந்த நிலை காணப்படும். உறவினர்களின் உதவியால் குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் ஓரளவுக்கு குறையும். தொழில் வளர்ச்சிக்கான முயற்சிகளில் கூட்டாளிகளின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். வேலைபளு குறையும். 

No comments