Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE
Thursday, May 29

Pages

Breaking News

கட்டைக்காட்டில் காணி சுவீகரிப்பு தடுத்து நிறுத்தம்


யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் கடற்படைக்காக காணி அளவிடும் முயற்சி காணி உரிமையாளர், பிரதேச மக்கள் மற்றும் அரசியல்வாதிகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது..

தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியை கடற்படைக்கு சுவீகரிப்பதற்காக நில அளவைத் திணைக்களம் யாழ்ப்பாணத்திலிருந்து இன்றைய தினம் திங்கட்கிழமை காலை சென்று இருந்தனர்.

அவர்களை மறித்த காணி உரிமையாளர், கிராம மக்கள், அரசியல்வாதிகள் இது எங்களுடைய சொந்த காணி, இதனை அளவீடு செய்வதற்கு அனுமதிக்க முடியாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் குறித்த நில அளவை அதிகாரி தனக்கு எழுத்து மூலமாக கடிதம் ஒன்றினை தருமாறு காணி உரிமையாளரிடம் தெரிவித்தார்.

காணி உரிமையாளர், கடிதத்தை வழங்கினர். அதனை அடுத்து காணி அளவீடு செய்வதை நிறுத்திவிட்டு நில அளவைத் திணைக்களத்தினர் திரும்பிச் சென்றுள்ளனர்