Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழ்.மாநகரசபையின் "முத்தமிழ் விழா- 2023"


யாழ்.மாநகரசபையின் "முத்தமிழ் விழா- 2023"  நல்லூர் ஸ்ரீ துர்க்காதேவி மணி மண்டபத்தில் யாழ்.மாநகரசபையின் ஆணையாளர் இ.த.ஜெயசீலன் நேற்றைய தினம் சனிக்கிழமை தலைமையில் நடைபெற்றது. 

 இந்த நிகழ்வில் வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் பிரதம விருந்தினராகவும், வடமாகாண உள்ளுராட்சி ஆணையாளர் செ.பிரணவநாதன், உள்ளிட்டவர்கள் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொண்டனர்.

விழாவில் இயல், இசை, நாடகத் துறைகளில் பெரும் பங்காற்றிய மூவர் யாழ்.மாநகரசபையின் உயரிய விருதான 'அரசகேசரி' விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டனர். 

இயற் துறைக்கான விருதை கலாபூசணம் கோகிலா மகேந்திரனும் , இசைத்துறைக்கான விருதை கலாபூசணம் எம்.பி. பாலகிருஷ்ணன் அவர்களும் நாடகத்துறைக்கான விருதை கலாகீர்த்தி சாந்தினி சிவநேசன் ஆகியோர் ஆளுநரிடம் இருந்து பெற்றுக் கொண்டனர்.

இயல் இசை நாடக அரங்குகளாக நிகழ்ந்த நிகழ்வுகளில் ஈழநல்லூர் நாதஸ்வர இளவரசன் பி.ரஜீந்திரன் குழுவினரின் நாதஸ்வர கச்சேரியும், இசை நாட்டிய நாடக அரங்கில் திருமதி பாலினி கண்ணதாஸ் அவர்களின் நெறியாள்கையில் ஏழிசை மிருதங்க நர்த்தனாலயத்தின் 'வெந்து தணிந்தது காடு' எனும் நாட்டிய நாடகமும், இயல் அரங்கில்

'எம் மண்ணில் இன்றைய சூழலில் உயர்கல்வியும், மனிதநேயம், கலாசார பண்பாடுகளும் எனும் தலைப்பில் தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலயத் தலைவரும், சைவத்தமிழ் அறிஞருமான செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகனை நடுவராகக் கொண்ட பட்டிமன்றமும் நடைபெற்றது.

பட்டிமன்றத்தில் ச.லலீசன், ந.விஜயசுந்தரம்,கு.பாலசண்முகன்,ந.ஐங்கரன்,தெ. ஹர்சன், த.கருணாகரன் ஆகியோர் பங்கெடுத்தனர்.














No comments