யாழ்ப்பாண பல்கலைகழக பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெறவிருந்த மாணவன் உயிருடன் இல்லாத நிலையில் மாணவனின் தாயாரிடம் பட்டம் கையளிக்கப்பட்டது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வவுனியா வளாகத்தை (தற்போதைய வவுனியாப் பல்கலைக்கழகத்தை) சேர்ந்த திசாநாயக முதியன்சேலாகே ஹஷான் சகார திசாநாயக என்பவர் பிரயோக கணிதம் மற்றும் கணிப்பிடலில் விஞ்ஞானமாணிப் பட்டத்துக்கு உரியவராக்கப்பட்ட பின்னர் உயிருடன் இல்லாததால், இன்று இடம்பெற்ற 37 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழாவில் தேகாந்த நிலையில் அவரது தாயாரிடம் பட்டம் கையளிக்கப்பட்டது.
No comments