வரக்காபொல – துல்ஹிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் , 10 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அம்பேபுஸ்ஸவிலிருந்து அலவ்வ நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும், எதிர்திசையில் பயணித்த பாரவூர்தியொன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பில் பாரவூர்தியின் சாரதியை கைது செய்து, வரக்காபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.







No comments