கந்தானை பிரதேசத்தில் உள்ள இரசாயன உற்பத்தி தொழிற்சாலையின் களஞ்சியசாலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டதில் ஊழியர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
Follow us via Whats App https://chat.whatsapp.com/H2g8RmUpm8xDqiZJH11jfN
அதேவேளை தீயினால் எழுந்த புகையை சுவாசித்த, புனித செபஸ்தியார் பெண்கள் கல்லூரி, புனித செபஸ்தியார் ஆரம்ப பெண்கள் கல்லூரி மற்றும் புனித செபஸ்தியார் ஆண்கள் ஆரம்பப் பிரிவுகளைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் புகையை சுவாசித்ததால் மூச்சுத் திணரல் ஏற்பட்டு ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கந்தானை தெவதொட்டுபல வீதிப் பகுதியில் உள்ள இரசாயனப் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைக்கு சொந்தமான களஞ்சியசாலையில், இன்றைய தினம் தீ பரவியுள்ளது.
தீ விபத்து ஏற்பட்ட போது தொழிற்சாலையில் ஒருவர் மட்டும் இருந்ததால், தீயில் சிக்கி சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
குறித்த தொழிற்சாலையில் கணக்காளராக கடமையாற்றிய கணேமுல்ல பிரதேசத்தை சேர்ந்த 50 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.
No comments