மாத்தளை, ரத்வத்த தோட்டத்தில் தோட்ட முகாமையாளரினால் தொழிலாளர்களின் வீடு அடித்து நொறுக்கப்பட்டமைக்கு, இன்று நாடாளுமன்றில் எதிர்ப்பு வெளியிடப்பட்டன.
இதன்போது உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்டவர்கள், குறித்த முகாமையாளருக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
நாடாளுமன்றம் இன்று காலை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியது.
இதன்போது சபை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதற்கு முன்னரே, மனோ கணேசன், இராதாகிருஸ்ணன், வடிவேல் சுரேஷ் உள்ளிட்ட உறுப்பினர்கள் இணைந்து, மாத்தளை- ரத்வத்த தோட்டத்தில் அண்மையில் இடம்பெற்ற சம்பவத்திற்கு எதிர்ப்பினை வெளியிட்டு கோஷமெழுப்பினர்.
குறித்த தோட்டத்தில் அமைந்துள்ள வீட்டை அடித்து நொறுக்கிய தோட்ட உதவி முகாமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, சபையில் இவர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
No comments