Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

சாரதி அனுமதி பத்திரத்திற்கான வாய் மொழி பரீட்சை யாழில்!


எழுதுதல் , வாசித்தல் திறன் குறைந்தோர் சாரதி அனுமதி பாத்திரம் பெற்றுக்கொள்வதற்கான வாய் மொழி பரீட்சை எதிர்வரும் 25ஆம் மற்றும் 26ஆம் திகதிகளில் யாழ்.மாவட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் நடைபெறவுள்ளது. 

சாரதி அனுமதி பத்திரத்திற்கான எழுத்து பரீட்சையில் இரண்டு தடவைகளுக்கு மேல் தோற்றி , சித்தியடைய தவறிய யாழ்.மாவட்டத்தை சேர்ந்த பரீட்சார்த்திகள், தமது பிரதேச செயலகத்தில் விண்ணப்ப படிவங்களை பெற்று , பூர்த்தி செய்து கிராம சேவையாளரிடம் உறுதிப்படுத்தி , பிரதேச செயலரினால் மேலொப்பம் இடப்பட்ட விண்ணப்ப படிவத்துடன் , எழுதுதல் , வாசித்தல் திறன் குறைந்தோர் என்பதனை உறுதிப்படுத்தும் ஆவணத்துடன் , மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் முற்பதிவுகளை மேற்கொண்டு குறித்த திகதிகளில் வாய் மொழி பரீட்சையில் தோற்ற முடியும் என மாவட்ட செயலர் அறிவித்துள்ளார். 

No comments