Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில். "ஈ-குருவி நடை 2023"


உள்ளூர் உற்பத்திகளை பெறுமதி சேர்க்கை ஊடாக மதிப்பு கூட்டும்  வகையிலான விழிப்புணர்வை சமூக மட்டத்தில் உருவாக்கும் வகையில் "ஈ-குருவி நடை 2023" இன்றைய தினம்  ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணி முதல் 9.30 மணி வரை நடைபெற்றது. 

Follow us via Whats App https://chat.whatsapp.com/H2g8RmUpm8xDqiZJH11jfN

யாழ்ப்பாண பொதுநூலக முன்றலில் ஆரம்பித்த  குறித்த நடைபயணமானது, வைத்தியசாலை வீதியூடாக சத்திர சந்தியினை அடைந்து, அங்கிருந்து கோட்டை சுற்றுவட்ட வீதியூடாக மீண்டும் பொது நூலகத்தினை வந்தடைந்தது. 

உடல் உள ஆரோக்கியத்தை மேம்மடுத்த ஒவ்வொரு நாளும் 10,000 காலடிகள் நடப்பதை விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களில் மதிப்பு கூட்டுவதற்கான ஆதரவை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டது.

ஈ-குருவி நடையானது கடந்த 2020ஆம் ஆண்டு முதல் கனடா மற்றும் இலங்கையில் சமூகம் சார்ந்த விழிப்புணர்வினை மேற்கொள்ளும் நடையின் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.










No comments