யாழ்ப்பாணம் அராலி கிராமத்தில் முருங்கைச் செய்கையை ஊக்குவிக்கும் வகையில், அராலி இந்து கல்லூரி நூற்றாண்டு விழாவின் போது பாடசாலையில் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களினதும் குடும்பங்களும் முருங்கை நாற்றுக்கள் வழங்கப்பட்டன.
கல்லூரி விவசாய கழக மாணவர்களால் நல்லின முருங்கை நாற்றுகள் பாடசாலையில் உற்பத்தி செய்யப்பட்டு, நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தின் முதல் நாள் நிகழ்வில் மாணவர்களிற்கு வைபவ ரீதியாக வழங்கப்பட்டது.
அராலிப் பகுதியின் காலநிலைக்கும், மண் மற்றும் நீர் கிடைக்கும் வாய்ப்புக்களிற்கும் ஏற்ப குறைந்த செலவில், நிறைந்த போசணைமிக்க பயிராக முருங்கை மரத்தை சகல மாணவர்களினதும், குடும்பத்திற்கும் பாடசாலைத் தோட்டத்தின் நாற்றுமேடையில் உருவாக்கிய பொதிசெய்யப்பட்ட நாற்றுக்கள் வழங்கப்பட்டன.
உலக உணவு ஸ்தாபனத்தின் நிதி ஈட்டத்துடன் வடக்கு மாகாணப் பாடசாலைகளில் இடம்பெற்று வரும் தொழில் முனைவுடன் கூடிய பாடசாலை நிகழ்ச்சித் திட்டத்தை சிறப்பாக நடைமுறைப்படுத்தும் பாடசாலையாகவும் அராலி இந்துக் கல்லூரியும் காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments