Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

யாழில். ஆட்களற்ற வீடுகளில் கூடும் போதைக்கும்பல்கள் ; பொலிஸாரின் கண்காணிப்பை தீவிரப்படுத்த கோரிக்கை


யாழ்ப்பாணம் நகர் பகுதி,  மற்றும் புறநகர் பகுதிகளில் ஆட்கள் அற்ற வீடுகளில் ஒன்று கூடும் போதைக்கு அடிமையானவர்கள் , அந்த வீடுகளில் இருந்து போதையை நுகர்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. 

ஆட்கள் அற்று , பாழடைந்த வீடுகளில் மாலை வேளைகளில் ஒன்று கூடும் போதைக்கு அடிமையான கும்பல்கள் , அந்த வீடுகளில் கும்பல் கும்பலாக போதை பொருட்களை நுகர்ந்து கொள்கின்றனர். 

அவர்கள் வீடுகளுக்குள் இருந்து பெரும் குரல் எழுப்பி சத்தங்களையும் எழுப்புவதனால் , அவ்வீடுகள் அமைந்துள்ள வீதிகளால் பயணிப்போர் அச்சத்துடனையே பயணிக்கின்றனர். 

யாழில் போதைப்பொருள் பாவனை அதிகரித்து வரும் நிலையில் , ஊசி மூலம் போதைப்பொருளை உட்செலுத்தி கொள்வர் , அதிகளவில் போதையை உட்செலுத்துவதாலும், தொடர்ந்து போதையை நுகர்வதால் கிருமி தொற்றுக்கு இலக்காகியும் உயிரிழப்புக்கள் ஏற்படும் சம்பவங்களும் அதிகரித்துள்ளமையால் ,சந்தேகத்திற்கு உரிய இடங்களில் பொலிஸார் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments